தமிழ் சினிமா கொண்டாடும் கதாநாயகி ஜெயலலிதா..

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திரைப்படங்களில் நடித்து பல விருதுகளை வாங்கியுள்ளார். ஒரு நடிகையாக முறியடிக்க முடியாத பல சரித்திர சாதனைகளை படைத்தவர் ஜெயலலிதா இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெண்ணிற ஆடை என்கிற படத்தில் அறிமுகமானார்.  இந்த படத்தில் நடிப்பதற்காக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ஹிந்தி நடிகை ஹேமமாலினி ஆனால் ஹேம மாலினியை விட நடனத்திலும் நடிப்பிலும் திறமையான புதுமுகம் வேண்டுமென்பதற்காகவே ஜெயலலிதாவை இயக்குனர் ஸ்ரீதர் தேர்வு செய்திருக்கிறார்.

வெண்ணிற ஆடை திரைப்படம்  வெளியாவதற்கு முன்பாகவே அவர் நடித்த சின்னதகொம்பே, மனே அலியா ஆகிய கன்னட படங்கள் வெளியாகிவிட்டன இந்த படங்களுக்கு முன்பு முன்னாள் குடியரசுத்தலைவர் வி வி கிரியின்  மகன் ஷங்கர் கிரி இயக்கிய epistle என்ற ஆவண படத்திலும் ஸ்ரீசைல மகாத்மே என்ற கன்னட படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார் ஜெயலலிதா. அதேபோல பல மேடை நாடகங்களிலும் நடித்திருக்கிறார் மேலும் தன் தாயாருடன் இணைந்து கதாநாயகியாக அவர் நடித்த அண்டர் செகரட்டரி என்கின்ற நாடகத்தில் ஜெயலலிதாவின் ஜோடியாக சோ ராமசாமி நடித்திருக்கிறார்.

இவர் தமிழில் முதன் முதலாக நடித்த வெண்ணிற ஆடை திரைப்படம் 1965ஆம் ஆண்டு வெளியானது .மிகப்பெரிய வெற்றியை கொடுத்த அந்தத் திரைப்படத்திற்கு பிறகு 1966ம் வருடம் 23  படங்களில் ஒப்பந்தமானார். அந்த23 படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படமும் ஒன்று .முதன்முதலாக புரட்சி தலைவர் எம். ஜி. ஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா இதில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது .அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

1965 ஆம் ஆண்டு தொடங்கி 1973 ஆம் ஆண்டு வரை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இணைந்து நடித்த 28 படங்களுள் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தன .அடுத்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நட்சத்திரங்கள் ஓடும் நடித்தார் ஜெயலலிதா ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், தெலுங்கில் என்டி ராமராவ், நாகேஸ்வரராவ், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,இப்படி 17 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் ஜெயலலிதா.

இவர் நடித்த பட்டிக்காடா பட்டணமா திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது. மேலும் அதே படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார் ஜெயலலிதா. சந்திரோதயம், அடிமைப்பெண், எங்கிருந்தோ வந்தாள், ஸ்ரீகிருஷ்ண சத்யா ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதுகளை பெற்றார். ராமன் தேடிய சீதை, தங்ககோபுரம், திருமாங்கல்யம், சூரியகாந்தி, யாருக்கும் வெட்கமில்லை ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார் ஜெயலலிதா.

கதாநாயகியாக நடித்த 92 தமிழ் படங்களில் 85 படங்கள் சில்வர் ஜூப்ளி வெற்றி பெற்றன.80 வருட தமிழ் சினிமா வரலாற்றில் வெற்றிகரமான கதாநாயகி என்று யாராலும் முறியடிக்க முடியாத சாதனை படைத்தவர் .ஜெயலலிதா அதேபோல 28 தெலுங்கு சில்வர் ஜூப்ளி வெற்றிகளையும் தந்தவர். 1965ஆம் ஆண்டிலிருந்து 1980ஆம் ஆண்டு வரை தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கிய கதாநாயகி என்கின்ற சாதனையை தக்க வைத்துக் கொண்டவர் ஜெயலலிதா .

சினிமா துறையில் பல வெற்றிகளைப் ஜெயலலிதா 1980-ஆம் ஆண்டு நதியை தேடி வந்த கடல் என்கின்ற திரைப்படத்தோடு சினிமாக்களில் தோன்றுவதை நிறுத்திக்கொண்டார். அதற்குப் பிறகு அரசியல் வாழ்வில் ஈடுபட்டு தமிழக அரசியலில் அசைக்க முடியாத தலைவராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version