திமுக ஆட்சியில் மூடப்படும் பாலூட்டும் அறைகள்! கொந்தளிக்கும் தாய்மார்கள்!

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விடியா திமுக அரசு மூடியுள்ளது. பாலூட்டும் அறைகள் சமூக விரோதிகள் பயன்படுத்தும் கூடாரமாக மாறி வரும் அவலம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

தமிழகத்தில் விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து முடக்கி வருகிறது. அம்மா உணவம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட மக்கள்நலத் திட்டங்களின் வரிசையில் தற்போது தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் முடக்கப்பட்டுள்ளதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் பாலூட்டும் அறை மூடப்பட்டதால், அவைகள் சமூக விரோதிகள் பயன்படுத்தும் கூடாரமாக மாறியிருப்பது வேதனையின் உச்சம்.

தாய்மார்கள் பொதுஇடங்களில் எவ்வித தயக்கமும் இன்றி தங்களுடைய குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கு வசதியாக, கடந்த 2015 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால், அனைத்து பேருந்து நிலையங்களிலும் பாலூட்டுகள் அறைகள் திறக்கப்பட்டன. ஆனால் விடியா திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பாலூட்டும் அறைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை பூட்டியே கிடப்பதால், பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இதேபோல் திருப்பூர் தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை, கடந்த 2 ஆண்டுகளாக குடிமகன்களின் மது அருந்தும் பாராக மாறியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகின்றனர். மேலும், சுகாதாரமற்ற முறையில் காணப்படுவதால், பாலூட்டும் அறைக்கு தாய்மார்கள் செல்லமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் கடந்த பல மாதங்களாக தாய்மார்கள் பாலூட்டும் அறை பூட்டப்பட்டு உள்ளதால், கை குழந்தைகளுடன் வரும் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையில், சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர். கடந்த சில மாதங்களாக பாலூட்டும் அறை பூட்டியே இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த பாலூட்டும் அறை மூடிக்கிடக்கிறது. இதுபோன்று தமிழக முழுவதும் தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருவதால், தாய்மார்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இத்திட்டமும் விடியா திமுக ஆட்சியாளர்களால் கைவிடப்படுமோ என்ற எண்ணம் தாய்மார்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே தாய்மார்கள் பாலூட்டும் அறைகளை பராமரித்து, புத்துயிர் கொடுக்க வேண்டும் என்பதே பெண்களின் கோரிக்கையாக உள்ளது.

Exit mobile version