OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!

தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன் நடிப்பால் கிறங்கவைத்த தமன்னா இனி பல செலிபிரிட்டிகளை கேள்விகளால் துளைக்க இருக்கிறார்…. அப்படி என்ன அவதாரம் எடுக்கப்போகிறார் தமன்னா? விளக்குகிறது சிறப்பு செய்தி…

 

வெள்ளித்திரையில் கோலோச்சிய பல ஹீரோயின்கள் தங்கள் மார்க்கெட் போனவுடன் உடனடியாக இறங்கி வருவது சின்னத்திரைக்குத்தான்…. 70’S நாயகிகள் முதல் 90’S நாயகிகள் வரை திரைப்படங்களில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கிறங்க வைத்த பலரும் மெகா சீரியல்கள் வாயிலாக ரசிகைப் பட்டாளங்களையும் தன் வசப்படுத்தினர்…

அந்தக்காலம் தற்போது மலையேறிவிட்டது,… சின்னத்திரைக்கு போட்டியாக ஓடிடி ப்ளாட்பார்ம்கள் மக்களின் இல்லங்களில் கல்லா கட்டிக்கொண்டிக்கின்றன… இதைத்தான் தற்போது பயன்படுத்த முடிவு செய்துள்ளார் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்த தமன்னா…

30 வயாகும் தமன்னா தற்போது, தெலுங்கில் குயின் ரீமேக் மற்றும் சீட்டிமார் என்ற 2 படங்களில் மட்டுமே நடித்துவருகிறார்.. பட வாய்ப்புகள் குறைந்திருப்பதால் என்ன செய்வது என்று தவித்து வந்த தமன்னாவின் கையை பிடித்து அழைத்து வந்திருக்கிறது ஓடிடி ப்ளாட்பார்ம்… தெலுங்கில் அல்லு அரவிந்த்-கு சொந்தமான ஆஹா என்ற ஓடிடி ப்ளாட்பார்ம்மில் தொடங்க உள்ள ஒர் புதிய நேர்காணல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் தமன்னா…

இந்தியில் ஹிட்டான காபி வித் கரண், தமிழில் ஹிட்டான காபி வித் டிடி போன்ற நேர்காணல் நிகழ்ச்சிகள் போல இந்த நிகழ்ச்சியிலும் மிக முக்கியமான தெலுங்கு செலிபிரிட்டிகளை தமன்னா பேட்டி எடுக்கப்போகிறார்… இந்த ஷோவின் ஒரு எபிசோடிற்கு தமன்னா பெறப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 8 லட்ச ரூபாய்…

ஒரு படத்திற்கு கோடிகளில் சம்பளம் வாங்கிய தமன்னாவின் மார்க்கெட் வெறும் 8 லட்சமாகிவிட்டதா என்றெல்லாம் நினைக்க வேண்டாம்… ஒரு படத்திற்கு 30 நாட்கள் மட்டுமே கால்ஷீட் வழங்கும் தமன்னா சுமார் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் …. ஆனால் இந்த புது ஷோவின் தொகுப்பாளராக தமன்னா பொறுப்பேற்றால் 30 நாள் கால்ஷீட்டிற்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுவார்…

Exit mobile version