ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.
கொடுமுடி ஒத்தக்கடை அருகே 2 கோடியே 79 லட்சம் செலவில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இந்நிகழ்வை மொடக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணி துவக்கி வைத்தார். இதில் அதிகாரிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.