இன்று இந்தியா-சீனா எல்லை பிரச்சனை குறித்து 21-வது சுற்றுப் பேச்சுவார்த்தை

இந்தியா- சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பாக 21-வது சுற்றுப் பேச்சுவார்த்தை சீனாவில் இன்று நடைபெற உள்ளது.

சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் டுஜியாங்கயான் நகரில் நடைபெறும் இப்பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் மற்றும் சீனா சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ பங்கேற்க உள்ளனர்.

இருவரும் இந்திய சீன எல்லைப் பேச்சுவார்த்தைக்கான சிறப்புப் பிரதிநிதிகள் ஆவர்.எல்லை விவகாரங்கள் தொடர்பாக ஏற்கனவே 20 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த நிலையில் 21-வது சுற்று இன்று நடைபெறுகிறது.

எல்லையில் அமைதியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கவும், மூன்றரை லட்சம் கோடி வர்த்தகப் பற்றாக்குறையை தீர்க்கவும் பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version