பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு, ரிசர்வ் வங்கி இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அரசியல்வாதிகள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சிலர், நமது அமைப்பு முறையை பயன்படுத்தி, வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, அதை செலுத்தாமல் தப்பியோடி விட்டதாக கூறிய அவர், ரிசர்வ் வங்கியால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். இதை கவனத்தில் கொண்டு, பிரச்சனைகள் குறித்து ஊடகங்கள் முன்பு விவாதம் நடத்தாமல், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கூடி தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.