இந்தியா-சவுதி இடையே இன்று பேச்சுவார்த்தை

பயங்கரவாத எதிர்ப்பு, கூட்டு ராணுவப் பயிற்சி உள்ளிட்டவைகள் குறித்து சவுதி அரேபிய இளவரசர்- பிரதமர் மோடி ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

2 நாள் அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதன்முறையாக இந்தியாவுக்கு வருகை தந்த சவுதி இளவரசர் சல்மானை டெல்லி விமானநிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். இந்தநிலையில், பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு, கூட்டு ராணுவப் பயிற்சி உள்ளிட்டவைகள் குறித்து குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோருடன் சவுதி இளவரசர் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின்போது, பயங்கரவாத ஒழிப்பு குறித்த விஷயங்கள் இடம்பெறும் என்றும், இந்தியா- சவுதி இடையிலான 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version