தலிபான்கள் – அமெரிக்கா இடையே இன்று அமைதி ஒப்பந்தம்

அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

மேற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சுமார் 19 ஆண்டுகளாக அமெரிக்க படைகளுக்கும் – தலிபான்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அமைதி உடன்படிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்நிலையில் கத்தாரின் தோஹா நகரில், அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையே அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் தலிபான் அமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 30 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட உள்ளன.

Exit mobile version