அக்டோபரில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்!

டி20 உலகக் கோப்பை தொடர் தொடர்பாக ஆகஸ்ட் மாதத்துக்கு முன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எந்த முடிவையும் எடுக்காது என தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச டி20- உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக செப்டம்பர் 30ம் தேதி வரை பிற நாடுகளுடனான எல்லை மூடப்படுவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்துக்கு முன் டி20 உலகக் கோப்பை தொடர்பாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எந்த முடிவும் எடுக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடத்தப்படுமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

Exit mobile version