நியூசிலாந்து அணிக்கு எதிரான 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
வெலிங்டனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகளவாக மணீஷ் பாண்டே 50 ரன்கள் எடுத்தார்.