சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போதைய ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னை பாண்டிபஜார்…. துணி கடை முதல் நகைக்கடை வரை மக்கள் தலைகளால் நிரம்பி வழியும் பகுதி.
கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாண்டி பஜாரில் சாலைகள் அகலமாகப்பட்டன. நடை பாதைகள் விரிவாக்கப்பட்டன. கடைகள் ஒழுங்கு படுத்தபட்டன. நெரிசல் மிகுந்த சாலை பூங்கா போன்று மாற்றப்பட்டன.
ரூ.40.79 கோடி மதிப்பில் பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம் கட்டப்பட்டது.
ஆயிரத்து 522 சதுர மீட்டர் பரப்பளவில் சுமார் 500 இருசக்கர வாகனங்கள் மற்றும் 200 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் அந்த நிறுத்தம் அமைக்கப்பட்டது.
இந்த நிறுத்ததில் மட்டுமே வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவித்து அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
ஆட்சி மாறிய நிலையில் காட்சியும் மாறியது. நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்த அலுப்பு பட்டு ஆங்காங்கே நிறுத்திவிட்டு அப்படியே கடைக்குள் நுழைய தொடங்கி இருக்கின்றனர் மக்கள். இதனை காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லை.
இதனால் பாண்டி பஜார் சாலைகள் மீண்டும் நெரிசல் மிகுந்த இடமாக மாறியுள்ளன. பூங்கா போல இருந்த நடைபாதைகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு நடக்க தொடங்கி உள்ளன.
அரசின் அலட்சியம் ஒரு புறம் எனில் இந்த நெரிசலுக்கு ஏற்படுவதற்கு பின்னால் மக்களின் அலட்சியமும் அடங்கி இருக்கிறது.
அபராதம் விதிக்கவில்லை என்பதற்காக சாலையில் படுத்து உறங்க முடியுமா.. எனில் வாகனங்களை மட்டும் ஆங்காங்கே நிறுத்து விட்டு செல்வது எந்த வகையில் சரி என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
நியூஸ் ஜெ. செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் யோசேப்புடன் செய்தியாளர் கோபாலகிருஷ்ணன்.