தொற்றுநோய் ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தொற்றுநோய் ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உள்ளாட்சித் துறையும், சுகாதாரத் துறையும் இணைந்து, டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். டெங்கு தடுப்பு தொடர்பாக தமிழக அரசு சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படும் அமைச்சர் கூறினார்.

Exit mobile version