ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்களை எடுத்தது.இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது.தொடர்ந்து இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புஜாரா 193ரன்கள்,ரிஷப் பண்ட் 159 ரன்கள், மயங்க் அகர்வால் 77 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 81 ரன்கள் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது.அந்த அணியின் ஹாரிஸ் 5 ரன்களுடனும், கவாஜா 19 ரன்களுடனும் காலத்தில் உள்ளனர்.