மேலும் 50 இந்தியர்களின் தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்துக் கொள்ள ஸ்விட்சர்லாந்து முடிவு?

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மேலும் 50 இந்தியர்களின் தகவல்களை இந்தியாவுடன் ஸ்விட்சர்லாந்து அரசு பகிர்ந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பலர் கணக்கு வைத்துள்ளனர். சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் வெளிநாட்டினரின் தகவல்களை பிறநாடுகளுடன் ஸ்விட்சர்லாந்து அரசு பகிர்ந்துக் கொள்வதில்லை என்பதால் வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்க பூமியாக ஸ்விட்சர்லாந்து திகழ்கிறது.

இதனிடையே இந்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த தகவல்களை அளிக்க ஸ்விட்சர்லாந்து அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி சிலருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்த ஸ்விட்சர்லாந்து அரசு, இந்திய அரசுடன் மேலும் 50 பேரின் வங்கி கணக்கு குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

Exit mobile version