தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு – இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரழப்பு

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பிற்கு இன்று ஒரே நாளில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 1700 பேர் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 17 உயிரிழந்து இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பன்றி மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு 3,800 பேர் பாதிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 1,700ஆக குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.இதனிடையே, பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு இன்று ஒரே நாளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். நாமக்கல்லை சேர்ந்த அங்காயி, சேலம் அங்காளி, தேனி மல்லிகா, மதுரை திருவேங்கடத்தை சேர்ந்த லட்சுமி மற்றும் திருமங்கலத்தை சேர்ந்த சுப்புலட்சுமி ஆகியோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version