கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் இயங்கி வரும் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில், 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை தேசிய புலனாய்வு மைப்பு தேடி வந்தது. இந்தநிலையில், பெங்களூருவில் குடும்ப உறுப்பினர்களுடன் ஸ்வப்னா சுரேஷ் இருந்தபோது, தேசிய புலனாய்வு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அலுவலகத்தில் ஸ்வப்னா ஆஜர்படுத்தப்படவுள்ளார்.