நடிகர் தேர்தல் நிறுத்தம் குறித்து சுவாமி சங்கர தாஸ் அணியினர் ஆளுநருடன் சந்திப்பு

நடிகர் தேர்தல் நிறுத்தம் குறித்து சுவாமி சங்கர தாஸ் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.

நேற்று நடிகர் சங்கத்தின் பாண்டவர் அணியினர் ஆளுநரை சந்தித்த நிலையில், இன்று மரியாதை நிமித்தமாக சுவாமி சங்கர தாஸ் அணியினர் ஆளுநரை சந்தித்துள்ளனர். இது குறித்து சங்கரதாஸ் அணி சார்பில் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசரி கணேஷ், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நடிகர் சங்க தேர்தல் ரத்தானதற்கு விஷாலின் பாண்டவர் அணியே காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version