கன்னியாகுமரியில் கடல் நடுவே கட்டப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார்.
விவேகானந்தர் மண்டபத்தின் பொன்விழாவில் பங்கேற்க, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரது துணைவியருடன் தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார். குடியரசுத் தலைவரைத் தமிழக அரசு சார்பாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் தனிப்படகில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு குடியரசுத் தலைவர் வந்தடைந்தார். வியாழனன்று விவேகானந்த கேந்திரத்தில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் உரையாற்ற இருகிறார். விழாவில் பள்ளி மாணவ – மாணவிகளுடன் குடியரசுத் தலைவர் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து, விவேகானந்த கேந்திரத்தில் உள்ள பாரத மாதா கோவிலில் உள்ள ராமாயண வண்ண ஓவியக் கண்காட்சியை அவர் பார்வையிடுகிறார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டிக் கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.