மாலத்தீவு அமைச்சர்களுடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு

இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கிடையே இரு தரப்பையும் மேம்படுத்தும் விதமாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்தியா, மாலத்தீவு அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இரண்டு நாள் பயணமாக மாலத்தீவு சென்றார். அவருடன் இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றுள்ளனர். இந்த பயணத்தின் போது, சுஷ்மா ஸ்வராஜ், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாலிக்கை சந்தித்து பேசினார். கடந்த ஆண்டு மாலத்தீவு அதிபர் இப்ராகிம் சோலிஹ் இந்தியா வந்திருந்த போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருந்தன. இதனை செயல்வடிவமாக்குவது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமத் திதி, நிதி அமைச்சர் இப்ராகிம் அமீர், உள்கட்டமைப்பு துறை அமைச்சர் அப்துல்லா அமீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனிடையே இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், மாலத்தீவு அதிபரை சந்தித்து பேச உள்ளார்.

Exit mobile version