ஜாக்டோ-ஜியோ போராட்டம் : பணிக்கு வராதவர்கள் குறித்து கணக்கெடுப்பு

2வது நாளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தொடரும் நிலையில், பணிக்கு வராதவர்கள் குறித்து கணக்கெடுப்பு துவக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த கோகுல் என்ற 11ஆம் வகுப்பு மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடைபெற உள்ளநிலையில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில் பாதிப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்தநிலையில், 2வது நாளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தொடர்கிறது. இதையடுத்து, பணிக்கு வராதவர்கள் குறித்து கணக்கெடுப்பு துவக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Exit mobile version