புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளது…
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை பெருநகர மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாநகர காவல்துறையினர் அடங்கிய 30 கண்காணிப்பு குழுக்கள், தடை செய்யப்பட்ட பொருட்களை, மக்கள் எரிப்பதைத் தடுக்கும் விதமாக ரோந்து பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரமும் காற்றின் தரத்தினை கண்காணிக்க ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், இந்த ஆய்வில் தெரியவரும் காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே நேரம், தொடர்ந்து, நடத்தப்படும் விழிப்புணர்வு பிரச்சாரம் காரணமாக, கடந்த வருடங்களில் பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.