கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு

கர்நாடக அணையில் திறக்கப்பட்ட உபரி நீரால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிபடியாக குறைந்து வந்தது. இந்த நிலையில், தற்போது கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால், பிலிகுண்டுலுவுக்கு 3 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, காலை நிலவரப்படி 3 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரித்துள்ளது. பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து குறைந்த போதிலும், வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதால், பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 206-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version