நெடுஞ்சாலைகளை சோலை வனமாக மாற்றும் முயற்சி-சுரேஷ் குமார்

செல்லும் இடமெல்லாம் விதைகளை பரப்பும் பறவையை போல, மர விதைகளை தன்னோடு எடுத்துச் சென்று பார்க்கும் இடங்களில் தூவி விருட்சமாக்குகிறார்… வியாபாரி ஒருவர்… சூழல் காக்கும் பணியில் பலன் கருதாது ஈடுபட்டுள்ள அவரை பற்றி தற்போது பார்க்கலாம்….

சிவகங்கை மாவட்டம் கீழடியைச் சேர்ந்த ரொட்டி வியாபாரி சுரேஷ். இவர் மதுரையில் உள்ள பெரிய நிறுவனங்களில் ரொட்டி, மிக்சர், கடலை மிட்டாய்களை வாங்கிக்கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் திருப்புவனம் பகுதி கிராமங்களில் உள்ள சிறிய கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். தான் பயணம் செய்யும் வழியெல்லாம் புங்கன், வேம்பு, வாகை, புளி போன்ற மரங்களின் விதைகளையும் விதைப்பந்துகளாகத் தூவி வருகிறார். இப்படியாக இவர் தூவிய பல விதைகள் இன்று மரமாக வளர்ந்து கொண்டு வருகின்றன.

இந்த வழக்கத்தை கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர் செய்து வருவதாகவும், இதற்கு அவரது குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் அவர் கூறுகிறார். மேலும் அவரது குழந்தைகளும், பள்ளிக்கு சென்று வந்ததும் அவருக்கு தேவையான விதைப் பந்துகளை தயாரித்து உதவுகிறார்கள்.

இவ்வாறாக தான் செல்லும் வழியெல்லாம், மர விதைகளை தூவி நெடுஞ்சாலையினை சோலைவனமாக மாற்ற முயலும் சுரேஷின் முயற்சி பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

Exit mobile version