வாக்குப்பதிவை சுமூகமாக நடத்த உச்சக்கட்ட பாதுகாப்பு

பாரதிய ஜனதா கட்சியினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்ததை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் 710 கம்பனி துணை ராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுக்கும் மேற்குவங்க மாநில ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும் இடையே சமீபகாலமாக நிகழ்ந்துவந்த வார்த்தை போர் இருக்கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதலாக உருவெடுத்தது. குறிப்பாக கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேரணி சென்றபோது பாஜகவினரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். மேலும் கடந்த வாக்குப்பதிவுகளின்போதும் இதே நிலையே தொடர்ந்தது.

இதனிடையே இறுதிக்கட்ட வாக்குப்பதிவை சுமூகமாக நடத்தி முடிவுக்கும் பொருட்டு மேற்கு வங்கத்தில் இருநாட்களுக்கு முன்னதாகவே பிரசாரத்தை முடித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேற்கு வங்கத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 9 தொகுதிகளில் 676 கம்பனி துணை ராணுவ படையை பாதுகாப்பு பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தியுள்ளது. இதுதவிர 34 கம்பனி துணை ராணுவ படை வீரர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

Exit mobile version