தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் கெடு

கொரோனா தொற்றை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைப்பதை ஒத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்து இருக்கும் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15 அம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று கெடு விதித்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிரப்பித்துள்ளது.

வழக்கு விசாரணையின் போது கொரோனா தொற்று பரவல் அதிகம் இருப்பதால், விடுபட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஏற்கெனவே மாநில தேர்தல் ஆணையத்திற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்த நீதிபதிகள், கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

இனி மேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று கூறி இருக்கும் நீதிபதிகள் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் – உச்சநீதிமன்றம் கெடு

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15 அம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் 

கொரோனா பரவல் அதிகம் இருப்பதால், விடுபட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்க முடியாது; மாநில தேர்தல் ஆணையத்திற்கு போதுமான அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது

கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைப்பதை ஏற்க முடியாது, இனி கால அவகாசம் வழங்க முடியாது; செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த வேண்டும் – உச்சநீதிமன்றம் கெடு

தமிழ்நாட்டில் மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் தொற்று பாதிப்பு குறைந்ததும் தமிழ்நாட்டில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் கெடு விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version