அலோக் குமார் வர்மா மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

பதவி நீக்க நடவடிக்கை எதிர்த்து சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்குகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. இருவரும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

இதனால் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவ், இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு நடவடிக்கைக்கு எதிராக அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கடந்த டிசம்பர் 6ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.

Exit mobile version