டெல்லியில் அதிகார போட்டி தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு?

டெல்லியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் ஆட்சி நிர்வாகம் தொடர்பாக டெல்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து ஆம்ஆத்மி அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், யூனியன் பிரதேசமான டெல்லியின் ஆட்சி நிர்வாக அதிகாரம், துணை நிலை ஆளுநருக்கு மட்டுமே உள்ளதாக கடந்த 2016-ல் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து டெல்லியில் ஆளும் ஆம்ஆத்மி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்த வழக்கை அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றவும் டெல்லி அரசு கோரிக்கை விடுத்தது. இந்த வழக்கை நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Exit mobile version