புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் திட்டத்துக்கு எதிரான மனுக்கள் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

டெல்லியில், புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

தலைநகர் டெல்லியில் மத்திய விஸ்தா திட்டத்தின் கீழ், மூக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட உள்ளது. 971 கோடி ரூபாயில் அமையும் இக்கட்டடம், 2022 சுதந்திர தினவிழாவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. மேலும், கட்டடத்துக்கு அடிக்கல் நாட்ட மட்டும் அனுமதி வழங்கியதோடு, கட்டுமானம், மற்றும் தகர்ப்பு பணிகளை தொடங்கக்கூடாது என மத்திய அரசிடம் வாக்குறுதியும் பெற்றது. இதையடுத்து, டிசம்பர் 9ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், நாடாளுமன்ற கட்டடம் தொடர்பான வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

 

Exit mobile version