ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிகளுக்காக திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததோடு, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி கூறியது.
இந்நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக ஆலையை திறக்க உத்தரவிடும்படி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அதனை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.