நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட வலியுறுத்தி மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, உச்சநீதிமன்றம் வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து நான்கு பேரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்ததுடன், 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதி மறுத்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Exit mobile version