சமூக ஊடகமான ட்விட்டரில் வெறுப்புணர்வு கருத்துகளை நீக்க கோரிய வழக்கில் ட்விட்டர் நிறுவனம் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக கருத்துகளை பதிவிடும் ஆயிரக்கணக்கான ட்விட்டர் கணக்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், ட்விட்டரில் தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் கருத்துகளை நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவைச் சேர்ந்த வினித் கோயாங்கா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கேள்விக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கும், ட்விட்டர் நிறுவனத்திற்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.