உச்சநீதிமன்றத்தினைப் பொறுத்தவரையில் நிர்ணயிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை முப்பத்து நான்கு ஆகும். தற்போது ஐந்து நீதிபதிகள் பதவியேற்றுள்ளனர். ஏற்கனவே இருபத்தியேழு நீதிபதிகள் இருந்துவந்த நிலையில் தற்போது நீதிபதிகளின் எண்ணிக்கை முப்பத்து இரண்டாக மாறியுள்ளது. இந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை கொலீசியம் தான் தீர்மானிக்கிறது. கொலீசியத்தின் தலைவராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் உள்ளார். தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் ஆவார்.
நீண்டநாட்களாக இது தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் இருந்து வந்ததை ஒட்டி பிறகு 7 நீதிபதிகளுக்கு பதிலாக 5 நீதிபதிகள் நியமிக்க கொலீசியம் முடிவெடுத்தது. அந்த நீதிபதிகள் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிதல், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமனுல்லா, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரின் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஒப்புதல் கொடுத்துள்ளார். இவர்கள் ஐவரும் புதிய உச்சநீதிமன்ற நீதிபதியாக இன்று காலை பதவியேற்றனர். பதவிப் பிரமானத்தினை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி செய்துவைத்தார்.
Discussion about this post