தினக்கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்ந்த விவகாரம் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

தினக்கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்வதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பிற மாநிலங்களுக்கு நடந்தே பயணித்தது குறித்து, உச்சநீதிமன்றத்தில் இரண்டு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதி நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு காணொலி காட்சி மூலம் விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துசார் மேத்தா, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லியில் இருந்து செல்லும் கூலித்தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாதாடினார்.

வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் மத்திய அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

 

Exit mobile version