வண்டலூர் அருகே இன்று மாலை நடைபெறும் அதிமுக கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமர் வருகையையொட்டி, சென்னையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக, கொங்கு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச்சாலையில் முதலமைச்சர் பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.