சிபிஐ விசாரணையை கண்டு பயமில்லை என்றும் அகிலேஷ் யாதவுக்கு அளித்த ஆதரவு தொடரும் எனவும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைந்து, வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 5ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில், சுரங்க ஊழல் வழக்கில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மீது சிபிஐ விசாரணை நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க-வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், அகிலேஷூக்கு தங்களின் முழு ஆதரவு தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.