பீகார் மாநிலத்தில் PHED எனப்படும் பொது சுகாதாரத் துறையில் இளநிலை பொறியாளர் தேர்வில் காலியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெறும் 214 பணியிடங்களுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த விண்ணப்பங்களில் கல்வி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் முதல் கட்ட தேர்வுகள் முடிந்து இறுதியாக 2ம் கட்ட தேர்வுக்காக 642 பேர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை பார்த்த விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
காரணம் அந்த பட்டியலில் பிரபல நடிகை சன்னி லியோனின் பெயர் முதலிடத்தில் இருந்தது. அவர் 98.5 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றிருந்தார். அவரின் வயது 27 எனவும், 5 வருட பணி அனுபவம் உள்ளவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை சார்பில், சன்னி லியோன் பெயரில் விண்ணப்பம் வந்தது. அதில் அவர் இன்ஜினியரிங் தேர்வில் 98.5% மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பம் உண்மையானதா இல்லை போலியானதா என்றுக் கூட தெரியவில்லை. சான்றிதழ்கள் சரிபார்க்கும்போதுதான் இதன் நம்பகத்தன்மை குறித்து தெரிய வரும் என கூறப்பட்டுள்ளது.