இணையத்தொடராக வீரப்பன் கதை – முக்கிய வேடத்தில் சுனில் ஷெட்டி!

பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி கன்னடா வெப்சீரிஸ் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் சுனில் ஷெட்டி, அண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியான `தர்பார்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் கன்னட இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்க உள்ள வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார்.

`சந்தனக்கடத்தல்’ வீரப்பனின் வாழக்கையை வரலாற்றை அடிப்பபடையாகக் கொண்டு உருவாகும் இந்த வெப்சீரிஸில் சுனில் ஷெட்டி போலீஸாக நடிக்கிறார். `LTTE” என்ற பெயரிடப்பட்ட இந்த வெப்சீரிஸில் நடிகர் கிஷோர் வீரப்பனாக நடிக்கிறார்.இந்த மாத இறுதியில் சுனில்ஷெட்டி படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version