திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைந்த செலவில் பயிரிடப்படும் சூரியகாந்தி பூவில் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கீழ்பென்னாத்தூர் அடுத்த ஜமீன் கூடலூர், கரிப்பூர், நாரையூர் உள்ளிட்ட கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் சூரியகாந்தி பயிரிட்டு வருகின்றனர். மூன்று மாதகால பயிரான இதற்கு, குறைந்த அளவு தண்ணீர் போதுமானதாக உள்ளது. ஒரு ஏக்கருக்கு ஆயிரத்து 200 கிலோ வரை சூரியகாந்தி பூ அறுவடை செய்யப்படும் பூக்கள் திருக்கோயிலூர் உள்ள விற்பனை கமிட்டிக்கு அனுப்பப்படுகிறது. ஒரு கிலோ 30 ரூபாய் வரை விற்கப்படுவதால் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.