தமிழ்நாட்டில் ஞாயிறு முழுஊரடங்கு ; வெறிச்சோடிய முக்கிய சாலைகள்

ஞாயிறு முழு ஊரடங்கால் தமிழ்நாடு முழுவதும் முக்கிய சாலைகள், கடை வீதிகள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடின.

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன.

வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் புதிய பேருந்து நிலையம், கடை வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

மாவட்டத்தில் 650க்கும் மேற்பட்ட காவல்துறையினர், 24 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலத்தில் மாநகர பகுதியில் மட்டும் 6 உதவி ஆணையர்கள், 14 காவல் ஆய்வாளர்கள், 500-க்கும் மேற்பட் காவலர்கள் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர்.

மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் 41 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் முக்கிய சாலைகள், கடை வீதிகள் வெறிச்சோடியுள்ளன.

நெல்லை மாநகர பகுதிகளில் ஆயிரத்து 100 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆட்டோ, வாடகை கார், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடாததால் முக்கிய சாலைகள் ஆள் அரவமின்றி காணப்படுகின்றன.

ஈரோட்டில் பரபரப்பாக காணப்படும் கடை வீதிகள், சந்தைகள், முக்கிய சாலைகள் வெறிச்சோடியுள்ளன.

அத்தியாவசிய காரணங்களை தவிர தேவையின்றி சுற்றுவோரை பிடித்து காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

Exit mobile version