உலக சுகாதாரத்துறை நிறுவனங்களுக்கு சுந்தர் பிச்சை 800 மில்லியன் டாலர் நிதியுதவி!!!

Google மற்றும் Alphabet நிறுவனங்களின் CEO சுந்தர் பிச்சை, கொரோனாவை எதிர்கொள்ள சுகாதாரத்துறை நிறுவனங்களுக்கு 800 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

உலக முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், பல்வேறு நாடுகள் மருந்து தட்டுப்பாடு, நிதி பற்றாக்குறை உட்பட பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இதனையடுத்து, உலகில் உள்ள பில்லியனர்கள் பலர் இந்த அசாதாரண சூழலை சமாளிக்கும் வகையில் உலக சுகாதாரத் துறைக்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில், சுந்தர் பிச்சையின் ஆல்ஃபபெட் நிறுவனமும் 800 மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த நிதியுதவி சுகாதாரத்துறை நிறுவனங்கள், சிறு தொழில் செய்பவர்கள் மற்றும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை Google மற்றும் Alphabet நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை உறுதி செய்துள்ளார்.

 

Exit mobile version