ஜப்பானில் சுனாமி வரும் ஆபத்தா? ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்

ஜப்பானில் oar வகை மீன்கள் மீனவரின் வலையில் சிக்கியுள்ளது இதனால் சுனாமி வருமோ என்ற பயத்தில் ஜப்பான் மக்கள் உள்ளனர்.

காரணம் கடந்த 2010 ஆம் ஆண்டு இதே போன்று oar வகை மீன்கள் மீனவரின் வலையில் சிக்கின இதன் பிறகு ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று 2011-ஆம் ஆண்டு 20 oar வகை மீன்கள் மீனவரின் வலையில் சிக்கின அதன் பின்னர் அங்கிருக்கும் Fukushima-வில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் 20000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்.

ஜப்பானில் மட்டுமின்றி, பிலிப்பைன்சிலும் இதே போன்று சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்று ஜப்பான் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது. இருப்பினும் இது குறித்து ஆராய்ச்சியாளர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் இதற்கும், நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றிக்கும் 100 சதவீதம் சம்பந்தம் இல்லை, அதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று மறுக்கின்றனர்.

Exit mobile version