சன் டி.வியின் செயல் நியாமில்லை – த்ரிஷா

’96’ படத்தை தீபாவளியன்று தொலைக்காட்சியில் திரையிடுவது நியாமில்லை என்று த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திரிக்கிறார்.

த்ரிஷா,விஜய்சேதுபதி நடிப்பில் பெறும் வெற்றி பெற்ற ’96’ படத்தை தீபாவளியன்று தொலைக்காட்சியில் திரையிடுவது நியாமில்லை என்று த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திரிக்கிறார்.இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் தீபாவளியன்று மாலை 6.30 மணிக்கு ’96’ படத்தை ஒளிப்பரப்புவதாக சன் தொலைக்காட்சி விளம்பரப்படுத்தினர்.அதனை கண்டு படகுழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.இது தொடர்பாக த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

படம் வெளியாகி இது எங்களுக்கு 5வது வாரம். இன்னும் அனைத்து திரையரங்குகளிலும் 80 சதவீதம் நிரம்புகிறது. இவ்வளவு சீக்கிரம் 96 படத்தை தொலைக்காட்சியில் திரையிடுவது நியாயமல்ல என்று நாங்கள் நினைக்கிறோம். தயவு செய்து இதை பொங்கலுக்கு தள்ளி வையுங்கள் என்பது எங்கள் கோரிக்கை. செய்தால் நன்றி என தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version