தமிழகத்தில் 12 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. வெப்பச் சலனம் காரணமாக இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. வெப்பச் சலனம் காரணமாக சில பகுதிகளில் மழை பெய்து வந்தாலும் கரூர், திருத்தணி உள்ளிட்ட 12 நகரங்களில் நேற்று வெயில் சதமடித்துள்ளது.கரூரில் 109.4 டிகிரி பாரன்ஹீட்டும், திருத்தணியில் 108.5 டிகிரி பாரன்ஹீட்டும், வேலூரில் 106.8 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் இன்றும் வெப்பம் அதிகரித்து அனல்காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.