விழுப்புரத்தில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டுகளுக்கான கோடைகால பயிற்சி முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மல்லர் கம்பம், ரோப் மல்லர் கம்பம், சிலம்பம், யோகா, ஜிம்னாஸ்டிக்ஸ், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகள் கோடைகால பயிற்சி முகாமில் பயிற்சியளிக்கப்பட்டன. சுமார் ஒரு மாதமாக நடைபெற்ற பயிற்சி முகாமில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பங்கேற்றனர். பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்திக் காட்டப்பட்டன. மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன் நிறைவு விழாவில் பங்கேற்று சிறப்பாக விளையாடியவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்த சாகச நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்