கோடை சீசன் துவக்கம்: மலை வாசஸ்தலங்களுக்கு படையெடுக்கும் மக்கள்

கோடை சீசன் துவங்கியுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள், மலை வாசஸ்தலங்களுக்கு  படையெடுத்து வருகின்றனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் ஆரம்பமாகியுள்ளது. மாலைநேர சாரல் மழை, இதமான குளிர்ச்சி, வெண்மேகங்கள் தவழ்ந்து விளையாடும் காட்சிகளை சுற்றுலா பயணிகள் அதிகளவில் கண்டு ரசித்து வருகின்றனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வதிலும், குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்வதிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதேபோல் தொடர் விடுமுறையை முன்னிட்டு குன்னூரில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூரில், கோடை விழா ஆரம்பிக்கும் முன்னரே சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நூற்றாண்டு பழமை வாய்ந்த சிம்ஸ் பூங்கா, லேம்ஸ் ராக், டால்பினோஸ் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சிம்ஸ் பூங்காவில் உள்ள ஏரியில் படகு சவாரி செய்வதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பால் வியபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version