நெல்லையில் கோடை மழை: கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

அண்மையில் பெய்த கோடை மழையால் குளம், குட்டை பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கப்பெற்று கால்நடைகளுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில், பொதுவாக தண்ணீர் வறட்சி இருக்காது. ஆனால் இந்த வருடம் ஏற்பட்ட கடும் வறட்சியால் குளம், குட்டைகளில் தண்ணீரின்றி காணப்பட்டு வந்தது. இதனால் கால்நடைகள் தண்ணீரின்றி தவித்து வந்தன.

கோடை வெயில் அதிகமாக காணப்பட்டதால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு கொண்டு செல்ல முடியாமல் இருந்து வந்ததாக விவசாயிகள் தெரிவித்து வந்தனர். இதனிடையே அண்மையில் பெய்த கோடை மழையால் கால்நடைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version