சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு கோடை விடுமுறை ரத்து!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு கோடைக்கால விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மே மாதத்தில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் கோடை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் சூழலால், நீதி மன்றங்களில் வழக்குகள் தேங்கியுள்ளதை கருத்தில் கொண்டு, மே2 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை நீதிமன்றம் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் கோடை விடுமுறையும் ரத்து செய்யபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version