சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா மலர்க்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி துவக்கி வைத்தார்.
மலைகளின் அரசன் மற்றும் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் 44வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி துவக்கிவைத்தார். ஏற்காடு அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள மலர் கண்காட்சியில் 45 வகையான மலர்களில் சுமார் இரண்டரை லட்சம் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.