சூழல் சுற்றுலாவின் கோடைக்கால கொண்டாட்டம் 5 நாட்கள் அறிவிப்பு

பரளிக்காகாடு சூழல் சுற்றுலா வாரத்திற்கு 5 நாட்கள் நடத்தப்படும் என்று கோவை மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கோடைக்கால கொண்டாட்டமாக, மே மாதம் மட்டும் ஐந்து நாட்கள் சூழல் சுற்றுலா நடத்தப்படும் என்று மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இயற்கையை நேசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையின் அறிவிப்பை அடுத்து பலரும் சூழல் சுற்றுலாவில் பங்கேற்க முன்பதிவு செய்து வருகின்றனர்.

Exit mobile version