சிவகாசியில் அரசு உதவி பெறும் ஆதரவற்றோருக்கான பள்ளியில் கோடைகால முகாம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், அரசு உதவி பெறும் ஆதரவற்றோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கோடைகால பயிற்சி முகாமில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக ஆதரவற்ற குழந்தைகள் கல்வி பயிலும் உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது.பொருளாதார பிரச்சனையால் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவ மாணவிகளும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட மாணவ மாணவிகளும் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு நூல், காகிதம், பிளாஸ்டிக் பாட்டில், பென் ஸ்டாண்ட், நகைப்பெட்டி உள்ளிட்ட கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும் தன்னம்பிக்கை வளர்க்கும் விதமாக குழந்தைகளுக்கு யோகா பயிற்சியும் வழங்கப்படுகிறது.

Exit mobile version